FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இருமுடி படத்தின் காட்சிகளை நீக்க ஆந்திரப் பிரதேச ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி படத்திற்கு ஆந்திராவில் ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து...

இருமுடி படத்தில் ஸ்வாசிகா. - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பகிர்:

ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி திரைப்படத்திற்கு ஆந்திரப் பிரதேச ஆசிரியர்கள் சங்கம் (ஏபிடிஎஃப்) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் இருமுடி என்ற தெலுங்கு படத்தில் (தமிழில் இருமுடி கட்டு) ரவி தேஜா, பேபி நக்‌ஷத்திரா, பிரியா பவானி ஷங்கர், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடி இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரையை தவறான கதாபாத்திரத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திரப் பிரதேச ஆசிரியர்கள் சங்கம் (ஏபிடிஎஃப்) இந்தக் காட்சிகளை நீக்கும்படி தங்களது கண்டனத்தை முன்வைத்துள்ளார்கள்.

ஏபிடிஎஃப் சங்கத்தின் மாநில தலைவர் சென்னுபதி மஞ்சுளா மற்றும் மாநில செயலாளர் கே. பசவலிங்க ராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திரைப்படம் என்பது மிகவும் வலுவான ஓர் ஊடகம். அது சமூகத்தை பாதிக்கும். அரசுப் பள்ளிகளை இப்படியாக தவறாகக் காண்பித்தால் அது மக்களிடையே பயத்தை உருவாக்கும்.

திரைப்பட இயக்குநர்கள் அரசுப் பள்ளிகள் குறித்து எடுக்கும்போது சமூக அக்கறையுடன் படம் எடுக்க வேண்டும். படத்தில் வரும் ஆசிரியை மிகவும் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். இதனை புனைவு என கடந்து செல்ல முடியாது.

இந்த அரசாங்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் அணியும் அதே சீருடையே இவர்களும் அணிகிறார்கள். அலூரி சீதாராம ராஜி மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைப் படக்குழு காண்பித்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மீது தவறான எண்ணம் வரும்படி காண்பிக்கக் கூடாது. அது அரசுப் பள்ளிகள் மீது மக்கள் மனதில் தவறான பிம்பத்தை பதியவைக்கும். இது குறித்து ஆந்திர மாநிலத்தின் திரைப்பட கழகத்திடம் மேல்முறையீடு செய்துள்ளோம். அரசுப் பள்ளி மீது கலங்கம் ஏற்படுத்தக் கூடாதெனக் கூறியுள்ளார்கள்.

சமூக வலைதளத்தில் இந்தப் படத்துக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நிலையில், இந்தப் புகார் பின்னடைவை ஏற்படுத்துமா அல்லது படக்குழு என்ன முடிவெடுக்கும் என தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் இதனை பேசுபொருளாக மாற்றியுள்ளார்கள்.

summary

Andhra teachers’ body demands removal of ‘objectionable’ scenes in Telugu film Irumudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments