டாக்ஸிக் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்: நடிகர் யஷ்
டாக்ஸிக் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் யஷ் பேச்சு...
நடிகர் யஷ் டாக்ஸிக் திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் பேசியது கவனம் பெற்றுள்ளது.
டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படக்குழுவினர் தொடர்ந்து முன்வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று (ஆக. 24) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யஷ், “தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.
Advertisement
Advertisement
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால், அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. முதல்வர் விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.
நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வத்துடன் கூடிய உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.” எனக் கூறினார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Yash's speech at the pre-release event of the movie Toxic has garnered attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.