உதவியாளர் அவமதிப்பு? ரெஜினா கேசண்ட்ராவின் வைரல் விடியோவுக்கு குவியும் கண்டனங்கள்!
நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் வைரல் விடியோவுக்கு எழும் கடுமையான விமர்சனங்கள் குறித்து...
நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் வைரலான விடியோவுக்கு சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் அவரது செயலை விமர்சித்து வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா முதன்முதலாக கண்ட நாள் முதல் எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார். அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தமிழ், தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் தற்போது ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால், ரிலீஸ் தேதி இன்னும் இறுதிசெய்யப்படாமல் இருக்கிறது.
இந்தநிலையில், நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் வைரலான விடியோவுக்கு விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக தனது காலணிகளை கழட்டும் ரெஜினா தனது உதவியாளரை அழைத்து அதனை அவரது கையால் எடுக்க வைக்கிறார்.
இந்த விடியோவுக்கு சிலர் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து ரெஜினா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
Regina Cassandra trolled over viral footwear video: ‘Mookuthi Amman 2’ actress faces backlash ahead of the film’s release
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.