முகப்பு
செய்திகள்

தமிழில் திரையிடப்படும் சத்தா பச்சா!

மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்துள்ள புதிய படம் குறித்து...

Updated On : 6 பிப்ரவரி 2026, 3:47 pm IST
சத்தா பச்சா பட போஸ்டர். - படம்: இன்ஸ்டா / சத்தா பசா தி ஃபிலிம்
பகிர்:

மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்த சத்தா பச்சா எனும் மலையாள திரைப்படம் இன்றுமுதல் (பிப்.6) தமிழில் மொழியிலும் திரையிடப்படுகிறது.

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஜன.22ஆம் தேதி வெளியான இந்த மலையாள திரைப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

Advertisement

இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மம்மூட்டி வழங்க நடிகர் மோகன்லால் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ள நிலையில் சென்னை திரையரங்குகளில் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது.

summary

The Malayalam film 'Chatha Pacha', starring Malayalam actors Ashokan and Roshan Mathew, is being screened in Tamil as well, starting today (February 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.