FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே டெஸ்ட்டின் மூலமாக 147 இடங்கள் முன்னேற்றம்..! மேத்யூ ரென்ஷாவின் சாதனை!

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷாவின் ஐசிசி தரவரிசை முன்னேற்றம் குறித்து...

15 அக்டோபர் 2026, 12:31 pm IST
சதம் அடித்த மகிழ்ச்சியில் மேத்யூ ரென்ஷா - படம்: ஏபி
பகிர்:

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷாவின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 147 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஒரே டெஸ்ட்டில் மிகப்பெரிய இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டர்பனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேத்யூ ரென்ஷா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

இந்த அபார ஆட்டத்தின் மூலமாக ஐசிசி தரவரிசையில் 147 இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போதைக்கு 49ஆவது இடத்தில் இருக்கிறார்.

முதல் நான்கு இடங்களில் ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

summary

Durban triumph helps Aussie star Matthew Renshaw make big gains on icc Test rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments