முகப்பு
செய்திகள்

ரஜினி - கமல் திரைப்படம் உருவாகுமா?

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம் குறித்து...

Updated On : 1 ஜனவரி 2026, 2:52 pm IST
ரஜினிகாந்த், கமல் ஹாசன்
பகிர்:

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ஓரளவு வசூலீட்டியது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிப்பது உண்மைதான்; இயக்குநர் யாரென முடிவாகவில்லை என ரஜினி கூறியிருந்தார்.

ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் - 2 படத்திற்குப் பின் ரஜினி, கமல் ஹாசன் தயாரிப்பில் தன் 173-வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சுந்தர். சி விலகிய பின் புதிய இயக்குநர் உறுதிசெய்யப்படவில்லை.

அதேநேரம், நடிகர் கமல் ஹாசன் தன் 234 திரைப்படத்தின் பணிகளிலும் இருக்கிறார். இந்த நிலையில், ரஜினி - கமல் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு தள்ளிச்செல்வதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.