இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
இளையராஜா இசையமைப்பில் உருவாகும் “அரிசி” படத்தின் பாடலை பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்...
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் “அரிசி” படத்தில் ஒரு பாடலை பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், நடிகர் சமூத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய திரைப்படம் “அரிசி”.
விவசாயத்தை மையமாகக் கொண்ட கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், ‘அரிசி’ திரைப்படம் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகின்றது.
இந்த நிலையில், இளையராஜா இசையமைத்துள்ள “அரிசி” படத்தின் பாடல் ஒன்றை, பிரபல ராப் பாடகர்களான வேடன் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.