12 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா!
நடிகர் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தங்களின் 12 ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவது குறித்து...
சின்ன திரையில் நடிகர் செந்தில் - ஸ்ரீஜா தம்பதி தங்களின் 12 ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
சின்ன திரை ரசிகர்களுக்கு என்றுமே பிடித்தமான தம்பதியின் திருமண நாளுக்கு ரசிகர்கள் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வானொலி நிலைய வர்ணனையாளராக தனது பயணத்தை தொடங்கியவர் செந்தில். படிப்படியாக சின்ன திரையில் நடிக்கவும் தொடங்கினார்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடிகை ஸ்ரீஜாவுடன் செந்தில் நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் இந்த பாத்திரம் நீங்கா இடம் பிடித்தது.
சின்ன திரையில் ஒன்றாக நடித்த இவர்கள், நிஜ வாழ்கையிலும் தம்பதிகளாக மாறினர். நிஜ வாழ்க்கையிலும் தம்பதியான பிறகு, நடிப்பதை படிப்படியாக ஸ்ரீஜா நிறுத்திக்கொண்டார்.
தற்போது சொந்தமாக தொழில் மற்றும் 'செந்தில் ஸ்ரீஜா ஒரிஜின்ல்ஸ்' (Senthil Sreeja Originals) என்ற யூடியூப் சேனல் மூலம் தங்கள் பயணத்தை இருவரும் தொடர்ந்து வருகின்றனர்.
நடிகர் செந்தில் சமீபத்தில் அண்ணா தொடரில் நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர், செந்திலுக்கு புதிய வாய்ப்புகளை மீண்டும் உருவாக்கியுள்ளது.
போலீஸ் போலீஸ் இணைய தொடரிலும் நடித்து செந்தில் கவனம் ஈர்த்தார்.
தற்போது செந்தில் - ஸ்ரீஜா தம்பதி தங்களின் 12 ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Saravanan meenakshi Mirchi Senthil and Sreeja celebrate their 12th wedding anniversary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.