ஓடிடியில் வெளியான ரம்யா பாண்டியனின் சாருகேசி!
சாருகேசி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
ஒய்.ஜி. மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள சாருகேசி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சத்யா, பாட்ஷா, அண்ணாமலை, ஆளவந்தான் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இயக்கிய புதிய திரைப்படம் சாருகேசி.
‘சாருகேசி’ என்ற நாடகக் கதை, திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகரின் வாழ்க்கையும், அவரின் குடும்ப பின்னணியையும் மையப்படுத்தி, இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சாருகேசி திரைப்படம் கடந்த ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
வசனம், பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சாருகேசி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், தற்போது காணக் கிடைக்கிறது.
The film Charukesi, starring Y.G. Mahendran in the lead role, has been released on an OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.