நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
மலையாள நடிகை நவ்யா நாயர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது குறித்து...
மலையாள நடிகை நவ்யா நாயர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவ்வளவு பெரிய மகனா என வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கேரளத்தில் ஆழப்புழாவில் 1985ல் பிறந்த நவ்யா நாயர் 2001ல் இஷ்டம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் அழகிய தீயே படத்தில் 2004ல் அறிமுகமாகி கவனம் பெற்றார்.
நடிகை நவ்யா நாயர் திலீப்புடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர், 2010ல் திருமணம் செய்துகொண்டதால் நடிப்பிற்கு இடைவெளி விட்டார். பின்னர், பத்தாண்டுகளுக்குப் பிறகு 2022ல் ஒருத்தி என்ற படத்தில் கம்பேக் அளித்தார்.
Advertisement
Advertisement
விகே பிரகாஷ் இயக்கிய ஒருத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கிளாசிக்கல் நடனத்தில் ஆர்வமுள்ள அவர் மாதங்கி என்ற நடன வகுப்பையும் நடத்தி வருகிறார்.
சின்னத்திரைகளில் நடுவராகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் பாதிராத்திரி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், தனது 15 வயது மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “அவனை உற்றுநோக்குகிறேன். அவனுடன் சிரிக்கிறேன். காமிரா இருக்கிறது என்பதை அவன் கவனிக்கவில்லை. எதேச்சையாக இந்தப் புகைப்படங்களை எடுத்த சரமாவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
Navya Nair has such a grown-up son? Fans are surprised!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.