மலேசியாவில் தனுஷின் ஓம் இறுதிக்கட்ட படப்படிப்பு!
தனுஷின் ஓம் படப்பிடிப்பு குறித்து...
நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கியமான காட்சிகள் சில நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டு அங்கே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The final phase of shooting for actor Dhanush's film 'Om' has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.