FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு!

ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து...

Updated On : 12 ஜூலை 2026, 11:06 am IST
நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன்
பகிர்:

நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காகச் சந்தித்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது. இப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

இப்படத்தில் முதலில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Actors Rajinikanth and Hrithik Roshan have met for the movie Jailer 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments