அப்போது தமன்னா... இப்போது பூர்ணா... எகிறும் ஜெயிலர் - 2 எதிர்பார்ப்பு!
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் முதல் பாடலில் நடிகை பூர்ணா நடனமாடியுள்ளார்...
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 முதல் பாடல் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், இப்படத்தின் முதல் பாடலை வருகிற ஆக. 21 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அனிருத் இசையமைக்கும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வருவதால் ரஜினி ரசிகரான அவர் இப்படத்திற்காக சிறப்பான பாடலைக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில், முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ பாடலின் புரமோவில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளது தெரிய வந்திருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடிகை தமன்னா, காவாலா பாடலுக்கு நடனமாடியிருந்தார். அப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், பூர்ணாவின் நடன அசைவுகள் கவனிக்க வைப்பதால் இப்பாடலும் ஹிட் அடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்பாடல் புரோமோவில் ஒலிவாங்கியை ஒருவர் பிடித்திருப்பது தெரிகிறது. இது, பிரபல மலையாள நடிகர்களில் யாராவது ஒருவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
Anticipation is building regarding the first song from the movie Jailer, starring actor Rajinikanth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.