ஜன நாயகனால் தள்ளிச்சென்ற ஜிவி பிரகாஷின் இம்மோர்டல்!
இம்மோர்டல் திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான இம்மோர்டல் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படம் இம்மோர்டல்.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்தத் தேதியில் ஜன நாயகன் வரும் அறிவிப்பு வெளியாவதால் இம்மோர்டல் திரைப்படத்தை செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதனை அறிவிக்கும் விதமாக, ஜிவி பிரகாஷ், “தளபதி வந்தா தள்ளிப்போய்தான் ஆகணும். அதுவும் கடைசி படம்... ஜன நாயகன் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என இம்மோர்டல் விடியோவை பகிர்ந்துள்ளார்.
The release of the film Immortal, starring G.V. Prakash, has been postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.