அரசியலில் களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்?
அரசியலில் களமிறங்குவதாக வெளியான செய்திக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் விளக்கம்...
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அரசியலில் களமிறங்குவதாக வெளியான செய்திகளுக்கு அவரது அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவ்வின் பேரனும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான ஜூனியர் என்டிஆர் விரைவில் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாகச் செய்தி வெளியானது.
இந்தச் செய்தி ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கவனம் பெற்ற நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள “ரா என்டிஆர்” எனும் தனியார் நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது அரசியல் பயணத்தைத் துவங்குவதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் நேற்று (ஜூலை 14) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ரா என்டிஆர் எனும் பெயரில் செயல்படும் ஒரு அமைப்பு ஜூனியர் என்டிஆர் உடன் தொடர்புடையது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
ஜூனியர் என்டிஆர்-ஐ பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது அவர் சார்பாகச் செயல்படவோ அந்த அமைப்புக்கு எந்த வகையிலும் அதிகாரம் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
The office of popular Telugu actor Jr. NTR has issued a clarification regarding reports that he is entering politics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.