குஷ்பு மகள் திருமணம்! த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை!
குஷ்பு மகள் திருமணத்தில் நடிகை த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை பற்றிய தகவல்.
இன்னும் முடியவில்லையா, நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
முடியவில்லை, தற்போது மேலும் பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் விடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
விருந்தினர்கள் அனைவரும் ஒன்று போல சந்தன நிற ஆடை அணிந்திருந்தது, மணமகள் அலங்காரம், த்ரிஷா அலங்காரம் என பல புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன.
தற்போது குஷ்பு மகள் திருமணத்தில் எடுத்த மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில், த்ரிஷாவை செல்போனில் நடிகை தமன்னா படம்பிடிக்கிறார். அதனை யாரோ புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் ஆர்த்தி ரவியும் இடம்பெற்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பு நிறுவனம் தற்போது இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. இதில் மணமக்கள் மிக அழகாகக் காட்சியளிக்கிறார்கள். விருந்தினர்கள் பலருடைய புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்யும் வகையில் இந்த படங்கள் உள்ளன.
மிகப் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. விருந்தினர்களை குஷ்பு - சுந்தர் தம்பதி வரவேற்றனர். பலரும் திருமணத்துக்கு முந்தைய நாளே மண்டபத்துக்கு வருகை தந்திருந்தனர். அங்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என திரைப்பிரபலங்கள் பங்கேற்று திருமணமே நட்சத்திர திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது.
Khushbu's daughter's wedding! Famous actress turns photographer for Trisha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.