கல்யாணக்களை! கோவாவில் எடுத்த படங்களைப் பகிர்ந்த த்ரிஷா!
நடிகை த்ரிஷா, கோவாவில் எடுத்த படங்களைப் பகிர்ந்திருக்கிறார்..
ஜூன் 25ஆம் தேதி நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், கோவாவில் எடுத்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற அவந்திகா திருமணத்தில், மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார்.
த்ரிஷா பகிர்ந்த புகைப்படங்களைப் பார்க்க..
Advertisement
Advertisement
விருந்தினர்கள் பலரும் தங்கச் சரிகை நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தனர். எப்போதுமே மிக எளிமையான அதே வேளையில் நலினமான ஆடைகளை அணியும் த்ரிஷாவும், மிக அழகான புடவையும், கைவேலைப்பாடுடன் பிளவுஸ் அணிந்திருந்தார். மிக வெளிர்ந்த நிற ஆடைக்கு எடுப்பாக பச்சை நிற நெக்லஸ் மற்றும் அதே வெளிர் நிறத்தில் வளையல் அணிந்திருந்தார்.
அவர் கோவாவில் திருமணத்தில் பங்கேற்கும் முன் எடுத்தப் புகைப்படங்களை நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த பலரும், த்ரிஷாவுக்கு திருமணக் களை வந்துவிட்டது என்றும், புடவையில் அசத்தலாக இருப்பதாகவும் கருத்திட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே, குஷ்பு திருமணத்தில் எடுத்த படங்களும் விடியோக்களும் வைரலாகியிருக்கிறது. நடிகை குஷ்பு, தன்னுடைய மகள் அவந்திகா திருமணத்தில் எடுத்த படங்களையும் விடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
முன்னதாக, கோவாவில் நடைபெறும் குஷ்பு மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கோவா செல்லாமல் சென்னையில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
கோவாவில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
Wedding vibes! Trisha shares photos taken in Goa!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.