FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் அண்ணா கச்சேரி.. த்ரிஷா பகிர்ந்த ஜன நாயகன் மொமண்ட்ஸ்!

எங்க அண்ணன் வி கச்சேரி என்ற பாடலுடன் த்ரிஷா பகிர்ந்த ஜன நாயகன் மொமண்ட்ஸ் படங்கள் பற்றி..

Updated On : 23 ஜூலை 2026, 6:36 pm IST
நண்பர்களுடன் த்ரிஷா - instagram
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியான ஜன நாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் நிலையில், திரைப்படம் பார்க்கச் சென்றபோது எடுத்த படத்தை நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நடிகை த்ரிஷா, இன்று காலை 11 மணிக்கு கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி திரையரங்குக்கு தன்னுடைய தோழிகளுடன் வந்து ஜன நாயகன் திரைப்படத்தைக் கண்டு களித்தார்.

திரைப்படம் பார்க்க வந்த போது தோழிகள் எடுத்த புகைப்படத்தை, அவரது தோழி ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாபக்கத்தில், ஜன நாயகன் படத்தில் வரும் 'எங்க அண்ணன் வி கச்சேரி, தளபதி கச்சேரி' என்ற பாடலை பின்னணியில் இணைத்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த புகைப்படம் மற்றும் பாடலை த்ரிஷாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருப்பது பரபரப்பை கூட்டியிருக்கிறது.

காரில், த்ரிஷாவும் அவரது தோழிகளும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், கடைசியாக ஒரு முறை, கடைசியாக ஒரு நடனம் என்று பதிவிட்டு ஜன நாயகன் திரைப்படத்தில் வரும் எங்க அண்ணன் வி கச்சேரி என்ற பாடலையும் இணைத்திருக்கிறார்கள். இது அவர்களது ரசிர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

summary

vijay Anna's kacheri Jana nayagan moments shared by Trisha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments