கேப்டன் மில்லருக்கு 2 தேசிய விருதுகள்..! சிறப்பு நடிகராக தனுஷ் தேர்வு!
கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது குறித்து...
நடிகர் தனுஷுக்கு மேலும் ஒரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததுக்காக ஸ்பெஷல் மென்சன் பிரிவில் சிறப்பு நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அறிவிப்பில் தனுஷின் ராயன் படத்துக்கு முதல் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
பின்னர், நடிப்புக்காக கேப்டன் மில்லர் படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயகத்தில் 2024ல் கேப்டன் மில்லர் படம் வெளியானது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் தனுஷ் உடன் ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்தது. தற்போது, அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தப் படம் காணக்கிடைக்கிறது.
கேப்டன் மில்லருக்கு மேலும் ஒரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய, சமூக மற்ற்ய்ன் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் பிரிவில் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.
National Award for Dhanush for 'Captain Miller'!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.