FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வரவேற்பைப் பெறும் அன்பே டயானா திரைப்படம்!

அன்பே டயானா திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது...

Updated On : 19 ஜூலை 2026, 6:44 pm IST
பகிர்:

நடிகர் பாரி இளவழகன் நடிப்பில் வெளியான அன்பே டயானா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். பாரி இளவழகனின் முதல் படமான ஜமாவில் அவரே நாயகனாக நடித்து இயக்கியும் இருந்தார்.

தற்போது, அவர் நடிப்பு, இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் அன்பே டயானா. சென்னை பெரம்பூரில் நடக்கும் கதையாக உருவான இதில், நாயகன் ஆங்கிலோ இந்தியனான நாயகியைக் காதலிக்கும் கதையாக இது உருவாகியிருந்தது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளும் கவர்ந்துள்ளதால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

The film Anbe Diana, starring actor Pari elavazhagan, is receiving a good reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments