முகப்பு
செய்திகள்

5 நாளில் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்ட அன்பே டயானா!

பாரி இளவழகன் இயக்கி நடித்த அன்பே டயானா திரைப்படம் குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 11:14 am IST
அன்பே டயானா போஸ்டர். - படம்: எக்ஸ் / மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்
பகிர்:

பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் ஐந்து நாளில் 2 .50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆங்கிலோ இந்திய நாயகிக்கும் தென் தமிழக நாயகனுக்கும் நடைபெறும் கதையாக அன்பே டயானா உருவாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

எழுத்தாளர் கரன் கார்கி எழுதிய சட்டைக்காரி நாவலும் ஆங்கிலோ இந்திய பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் சிலர் இந்த நாவலை திருடிதான் படம் எடுக்கப்பட்டதாக சர்ச்சையானது. பின்னர், எழுத்தாளரே இரண்டும் வேறுவேறு என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், ”கடந்த ஐந்து நாள்களில் தமிழ்நாடு முழுவதும் 2.50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அன்பே டயானா படத்தைப் பார்த்துள்ளார்கள். அபரிமிதமான அன்பு மற்றும் அற்புதமான ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்க தவறவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளது.

முன்னதாக, இயக்குநர் பாரி இளவழகன், “அடுத்த வாரம் ஒரு சுனாமி வருகிறது. அதற்குள்ளாக இந்தப் படத்தைப் பார்த்து விடுங்கள். நானுமே விஜய் ரசிகன்தான்” எனக் கூறியிருந்தார்.

இன்று ஜனநாயகன் வெளியீட்டால் பல திரையரங்குகளில் இந்தப் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

summary

Two lakh fifty thousand People Watched Anbe Diana in Theatres Across Tamil Nadu in Just 5 Days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments