FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்த மனிதர்களுக்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்... நெகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நண்பர்களுக்கு நன்றி கூறியிருப்பது குறித்து...

Updated On : 19 ஜூலை 2026, 8:35 pm IST
குக் வித் கோமாளி நண்பர்களுடன் ரம்யா பாண்டியன். - படம்: இன்ஸ்டா / ரம்யா பாண்டியன்.
பகிர்:

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் குக் வித் கோமாளி நண்பர்களுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஜோக்கர் படத்தில் கவனம் பெற்ற ரம்யா பாண்டியன் மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்துள்ளார். சில இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

தற்போது, அருள் நிதி, ஆரவ் உடன் இணைந்து அருள்வான் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.

மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தினைக் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

என்னுடைய குக் வித் கோமாளி குடும்பத்தினர். அருள்வான் படத்தினைப் பார்க்க நான் அவர்களை அழைத்திருந்தேன். அனைவருமே உடனே சம்மதித்து படம் பார்க்க வந்தார்கள். நேரம் செலவிட்டு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பு, ஊக்கம், உடன் இருந்தது எல்லாமே எனக்கு மிகப்பெரியது. இவ்வளவு அற்புதமான மனிதர்கள் என் வாழ்க்கையில் இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments