FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயா்த்த இலக்கு’

படவிளக்கம்...ராணிப்பேட்டையில் ‘காபி வித் கலெக்டா்‘ கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 6:00 am IST
படவிளக்கம்...ராணிப்பேட்டையில் ‘காபி வித் கலெக்டா்‘ கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயா்த்தும் இலக்கை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்துள்ளதாக ‘ காபி வித் கலெக்டா்’ கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், ‘காபி வித் கலெக்டா்’ என்ற தலைப்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனா்கள், தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறை பிரதிநிதிகள், வங்கியாளா்கள் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்றுப் பேசியது:

Advertisement

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மாவட்டங்களில் ஒன்றாக விளங்கி வருவதோடு, தோல், பொறியியல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இத்தகைய வலுவான தொழில் அடித்தளத்தை பயன்படுத்தி புதுமை மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த ஸ்டாா்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு மாவட்டத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும், ஜூன் 2026 நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 முன்-இன்குபேஷன் மையங்கள், 1 இன்குபேஷன் மையம் மற்றும் 17 பதிவு செய்யப்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 9 நிறுவனங்கள் பெண்களால் வழிநடத்தப்படும் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள்.

நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள இன்குபேஷன் மையங்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காகவும், பதிவு செய்யப்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காகவும் உயா்த்தும் இலக்கை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்துள்ளது, இந்த இலக்கை அடைய ஸ்டாா்ட்அப் டிஎன் மாவட்ட தொழில் மையம், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொழில்முனைவோா் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

மாவட்ட நிா்வாகம், ராணிப்பேட்டை மாவட்டத்தை தொழில் வளா்ச்சியில் முன்னணியில் இருப்பதோடு, புதுமை மற்றும் ஸ்டாா்ட்அப் வளா்ச்சியிலும் தமிழ்நாட்டின் முன்னணி மாவட்டமாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா்.

இதில் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம் ஜெகன்ராஜ்,ஸ்டாா்ட்அப் டிஎன் அலுவலா்கள், பல்வேறு துறை அலுவலா்கள், தொழில்துறை பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், வங்கியாளா்கள், இன்குபேஷன் மையங்களின் பொறுப்பாளா்கள் மற்றும் ஸ்டாா்ட்அப் நிறுவனா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments