FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

5 ஆண்டுகளை நிறைவு செய்த சார்பட்டா பரம்பரை! பாகம் - 2 அப்டேட் எப்போது?

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை 5 ஆண்டுகளை நிறைவு செய்தது...

Updated On : 22 ஜூலை 2026, 1:48 pm IST
பகிர்:

இயக்குநர் பா. இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021 இல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது.

Advertisement

Advertisement

தற்போது, இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கான விடியோவையும் வெளியிட்டுள்ளனர். அடுத்ததாக, சார்பட்டா - 2 உருவாகிறது. இதிலும், ஆர்யாவே நாயகனாக நடிக்கிறார். இதுவும் தமிழக அரசியலின் முக்கியமான காலகட்டத்தைப் பேசும் படமாக உருவாகவுள்ளது. பா. இரஞ்சித்தின் வேட்டுவம் வெளியீட்டிற்குப் பின் சார்பட்டா - 2 படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

Director Pa. Ranjith's film Sarpatta Parambarai has completed five years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments