FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மறுவெளியீட்டில் 1700 நாள்களை நிறைவு செய்த விண்ணைத் தாண்டி வருவாயா!

மறுவெளியீட்டில் சாதனை படைத்த விண்ணைத் தாண்டி வருவாயா...

25 வினாடிகள் முன்பு
பகிர்:

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1700 நாள்களை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.

Advertisement

Advertisement

’இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.

இந்த நிலையில், சென்னை பிவிஆர் அண்ணாநகர் திரையரங்கில் 2021-ல் மறுவெளியீடு செய்யப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா தற்போது 1700 நாள்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் 1500 நாள்களைக் கடந்த முதல் இந்திய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The movie Vinnaithaandi Varuvaayaa has completed 1,700 days in theaters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments