நிம்மதியாய் உறங்கும் ஜனநாயகன் இயக்குநர் எச். வினோத்! இரா. சரவணன் வாழ்த்து
ஜனநாயகன் திரைப்படத்தின் கதையை முடித்துவிட்டு இயக்குநர் எச். வினோத் பாறைகளின் மீது படுத்து உறங்கியது குறித்து...
ஜனநாயகன் படத்தை இயக்கிய எச். வினோத் இன்னும் பல உயரங்களை எட்டுவார் என நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரா. சரவணன் பதிவிட்டுள்ளதாவது:
வா போகலாம்…” என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார். எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத்.
Advertisement
Advertisement
“இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்…” எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். ‘ஜனநாயகன்’ வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.
ஜன நாயகன் திரைப்படத்திற்கு சென்சார் பிரச்சினையால் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. சில நாள்கள் கழித்து சட்டவிரோதமாக இணையதளங்களில் படம் வெளியானது.
அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று திட்டமிட்டபடி ஜன நாயகன் படம் வெளியானது.
விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
H. Vinoth sleeping peacefully on the rocks! Ra. Saravanan extends jana nayakan wishes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.