மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு: ஹிப் ஹாப் ஆதி
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளது பற்றி...
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.
மேலும், லடாக்கைச் சேரந்த சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் உண்ணவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
Advertisement
Advertisement
ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட ஏராளமான மாணவர்கள் காயமடைந்த நிலையில், போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹிப் ஹாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாடெங்கும் போராடுவர்களுக்கு தேவை தீர்வும் ஆதரவும்; மௌனமோ, அச்சுறுத்தலோ, வன்முறையோ அல்ல! மாணவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
Singer, composer, and actor Hiphop Adhi stated on Thursday (July 23) that the students' protest is justified.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.