FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதிக விலைக்கு விற்பனையான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உரிமம்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 4:59 pm IST
சூர்யா, மமிதா பைஜூ - Instagram
பகிர்:

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.

ஏற்கனவே, இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கொடுத்தது. முக்கியமாக, சஞ்சய் விஸ்வநாத் என்கிற சூர்யா தன்னைவிட 20 வயது குறைந்த பெண்ணைக் காதலிக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தெரிகிறது.

Advertisement

Advertisement

தற்போது, நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கில் பாடிய இப்படத்தின் 2-வது பாடலான வெட்டிங் சாங் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கருப்பு திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வணிகம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Tamil Nadu theatrical rights for actor Suriya's film Viswanath and Sons have reportedly been sold for a high price.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments