மும்பையில் பல கோடி செலவில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் வீடு கட்டியுள்ளதாக
நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் புதிதாக வீடு கட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட், ரெட்ரோ ஆகிய திரைப்படங்களில் நடித்து அதிக கவனம் பெற்றார்.
இப்படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இவற்றில் இடம்பெற்ற, ஹபீபீ மற்றும் கனிமா பாடல்களில் பூஜாவின் ஆட்டம் பலரையும் அசரடித்தது. குறிப்பாக, கூலியில் மோனிகா பாடலுக்கும் நடனமாடி அசத்தியிருந்தார்.
Advertisement
Advertisement
நல்ல மார்க்கெட் உள்ள நடிகையென்பதால் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார். இவர் நடித்த ஜன நாயகன் அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையைப் பார்த்தது போல் வீடு ஒன்றை பூஜா ஹெக்டே கட்டியுள்ளாராம். இது ரூ. 50 கோடி செலவில் உருவான விசாலமான அறைகளுடன் கூடிய பெரிய வீடு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் படங்களிலும் பூஜா ஒப்பந்தமாகி வருவதால் மும்பையில் தனக்கான வீடை வாங்கியதாகத் தெரிகிறது.
Reports indicate that actress Pooja Hegde has built a new house in Mumbai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.