மொத ராத்திரி - வெளியீட்டுத் தேதியுடன் முதல் தோற்ற போஸ்டர்!
மொத ராத்திரி திரைப்படத்தின் புதிய அப்டேட்....
நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கும் மொத ராத்திரி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் ’மொத ராத்திரி’ எனும் படம் உருவாகி வருகிறது. புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் - நகைச்சுவைத் திரைப்படமான இது மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.
படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்த நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படம் ஆக. 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
The release date for the film Modha Rathiri, starring actor Rishikanth as the lead, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.