ரஜினி - 173 இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து!
ரஜினி - 173 திரைப்படம் குறித்து...
ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அஷ்வத் மாரிமுத்துவை வாழ்த்தி விடியோ வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியைத் தயாரிப்பு நிறுவனம் மாற்றியதாகவும் இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தின.
Advertisement
Advertisement
தற்போது, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்கமல் நிறுவனம் வாழ்த்துகள் தெரிவித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வழக்கமாக, தங்கள் தயாரிப்பிலிருக்கும் படங்களின் இயக்குநர், நடிகர்களுக்கே இப்படி வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பதால் ரஜினி - 173 படத்தை அஷ்வத் இயக்குவது உறுதியாகியுள்ளதாகவே தெரிகிறது.
Rajkamal's production company has released a video congratulating Ashwath Marimuthu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.