20 கோடி பார்வைகளைக் கடந்த பவழ மல்லி!
மிகப்பெரிய ஹிட் அடித்த பவழ மல்லி...
சாய் அபயங்கர் இசையில் உருவான பவழ மல்லி பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 4 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் சாய்யின் இசையும் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. சொல்லப்போனால், சாய் இசையே படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தற்போது, இயக்குநர் அட்லி திரைப்படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே, பவழ மல்லி என்கிற இசை ஆல்பத்தை வெளியிட்டார். திருமணம் சார்ந்த ஆல்பமாக இருந்த இதில் ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடினார். வெளியான நாளிலிருந்தே இந்தியளவில் கவனம் பெற்றது.
Advertisement
Advertisement
முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்காணோர் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இந்த நிலையில், இப்பாடல் வெளியான 91 நாள்களில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சாய் வெளியிட்ட அனைத்து ஆல்பங்கள் மில்லியன் கணக்கான ஹிட்ஸ் அடித்துள்ளதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகியுள்ளார்.
The song Pavazha Malli, composed by Sai Abhyankar, has crossed 200 million views.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.