ஒரே நேரத்தில் 10 திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், சாய் அபயங்கர்!
இசையமைப்பாளர்கள் அனிருத், சாய் அபயங்கர் இசையமைக்கும் படங்கள் குறித்து....
இசையமைப்பாளர் அனிருத், சாய் அபயங்கர் ஆகியோர் தலா 10 திரைப்படங்களைக் கைவசம் வைத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா என்றில்லாமல் இந்தியளவில் பிரபலமான முகங்களாக இசையமைப்பாளர்கள் அனிருத்தும் சாய் அபயங்கரும் வளர்ந்துள்ளனர். அனிருத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுடன் ஹிந்தி வரை திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சாய் அபயங்கரும் இன்றைய இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருக்கிறார். சாய் இசையமைக்கும் படங்களின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
Advertisement
Advertisement
தற்போது, அனிருத் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் கிங், நடிகர் ரஜினியின் ஜெயிலர் - 2, தர்மன், அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படம், நானியின் பாரடைஸ், ஏகே - 64 (தகவல்), அரசன், டிசி, நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படம், ஜூனியர் என்டிஆரின் புதிய படம் என 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றி வருகிறார்.
இன்னொரு பக்கம் சாய் அபயங்கர், பென்ஸ், கார்த்தியின் மார்ஷல், அல்லு அர்ஜுன் - அட்லியின் ராக்கா, தனுஷின் ஓம், சூர்யா - 48, சிலம்பரசன் - அஷ்வத் மாரிமுத்து திரைப்படம், துருவ் விக்ரமின் புதிய படம், விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் திரைப்படம் (தகவல்), சிவகார்த்திகேயன் - பார்க்கிங் இயக்குநர் படம் (தகவல்) என அனிருத்துக்கு இணையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தமாகி வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Music composer Anirudh and Sai Abhyankar each have 10 films in their lineup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.