கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!
கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் கடைசியாக இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இவரது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாக்கெட் நாவல், அரசன் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை தொடங்குகிறது.
இந்தப் படங்களுக்கு அடுத்து அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.