முகப்பு
செய்திகள்

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

அக்லி ஸ்டோரி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 9 ஜூன் 2026, 3:00 pm IST
அக்லி ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

அக்லி ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 2 வாரத்திலேயே, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காதல் கலந்த திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த மே 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரணவ் ஸ்வரூப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநந்து மற்றும் அவிகா கோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷ்ரவன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நாயகன், விசித்திரமான காதலை, கதாநாயகி மீது காட்டுகிறான். நாயகி இதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்லி ஸ்டோரி திரைப்படம் ஆஹா, அமேசான் பிரைம், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கிறது.

திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், ஓடிடி தளத்தில் அதிக பார்வைகளைப் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

summary

The movie Ugly Story has been released on an OTT platform just two weeks after its theatrical release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.