முகப்பு
செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் பற்றி...

Updated On : 11 ஜூன் 2026, 9:17 pm IST
திரையரங்கம் - கோப்புப் படம்
பகிர்:

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்.

டபுள் ஆக்குபன்ஸி

டபுள் ஆக்குபன்ஸி

அறிமுக இயக்குநர் அஷ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் சந்தோஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாறுபட்ட கதைக்களத்தில் காதல் ஃபேன்சஸி திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

ஹபீபி

ஹபீபி

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

ஆட்டி

ஆட்டி

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படம் பீரியட் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

நிழல்

நிழல்

ஏகே குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

சாருகேசி

சாருகேசி

சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஒய்ஜி மகேந்திரன், சுஹாசினி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்றாம் கண்

மூன்றாம் கண்

சகோ கணேசன் இயக்கியுள்ள இப்படத்தில் விதார்த், கலைச்செல்வன் நடித்துள்ளனர்.

வள்ளுவன்

வள்ளுவன்

சங்கர் சாரதி இயக்கியுள்ள இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா சவேரி நடித்துள்ளனர்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தெலுங்கு படங்கள்

சிங்கீதம்

சிங்கீதம்

சிங்கீதம் திரைப்படத்தை பிரபல பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார். நாக் அஸ்வின் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் ஆங்கில படங்கள்

பேக்ரூம்ஸ்

பேக்ரூம்ஸ்

அப்சஸன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிக வசூல் செய்த திகில் படமான பேக்ரூம்ஸ் இந்தியாவில் வெளியாகின்றது.

டிஸ்க்ளோஸர் டே

டிஸ்க்ளோஸர் டே

பிரபல இயக்குநர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் அறிவியல் புனைவு கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் ஹிந்தி படங்கள்

பாரத் பாக்ய விதாத்தா

பாரத் பாக்ய விதாத்தா

மனோஜ் தபாடியா இயக்கியுள்ள இப்படத்தில் கங்கனா ரனாவத் எம்பி நடித்துள்ளார்.

கவர்னர்

கவர்னர்

சின்மயி டி மந்த்லேகர் இயக்கியுள்ள இப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி, அதா ஷர்மா நடித்துள்ளனர்.

summary

Movies releasing in theaters this week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.