நாங்க நாலு பேரு... கருப்பு பாடல் வெளியீடு!
கருப்பு பாடல் வெளியீடு...
கருப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற நாங்க நாலு பேரு பாடல் வெளியாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன் ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் 5-வது வாரமாக திரையரங்குகளில் கணிசமான கூட்டமும் இருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்று பின் அகற்றப்பட்ட பாடலான நாங்க நாலு பேரு பாடலின் விடியோ வடிவத்தை வெளியிட்டுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பில் அசல் கோலார், அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The song "Naanga Naalu Peru" from the movie Karuppu has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.