2027 பொங்கல் வெளியீடாக சேயோன்?
பொங்கல் வெளியீடாக சேயோன்...
நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறதாம்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.
நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 படம் தீபாவளி வெளியீட்டைக் குறி வைத்துள்ளதால் சேயோன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
It is reported that actor Sivakarthikeyan's film Seyon is set to hit the screens as a Pongal release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.