எஸ்கே - 27 புதிய அப்டேட்!
சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்பட அறிவிப்பு...
நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் கவனிக்கப்பட்டவர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எஸ்கே - 27 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
A new update regarding actor Sivakarthikeyan's 27th film is set to be released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.