FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் தொடரில் இருந்து தீபா பாலு விலகல்?

நடிகை தீபா பாலுவின் பதிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.

Updated On : 30 ஜூன் 2026, 12:43 pm IST
ஹார்ட் பீட் தொடர் - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகை தீபா பாலுவின் பதிவால், ஹார்ட் பீட் இணையத் தொடர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்த ஹார்ட் பீட் இணையத் தொடரின் புதிய பாகத்தின் முன்னோட்ட விடியோ தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருந்தனர்.

டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Advertisement

Advertisement

ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது.

இந்தத் தொடரில் ரீனா என்ற பிரதான பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இந்தத் தொடரின் வெற்றிக்கு இவரின் எதார்த்தனமான நடிப்பும் முக்கிய காரணம்.

இந்தத் தொடரின் மூன்றாம் பாகத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கும் சூழலில், நடிகை தீபா பாலு அதிர்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சில இடங்களில்... சில மனிதர்களை... விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட் பீட் தொடரிலிருந்து தீபா பாலு விலகுகிறாரா? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடரின் புரோமோஷனுக்காக பதிவிட்டுள்ளரா? என்றும் குழப்பம் அடைந்துள்ளனர்.

”ஹார்ட் பீட் 3 ஆம் பாகத்தில் நீங்கள் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது, உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹார்ட் பீட் இணையத் தொடரில் இருந்து தீபா பாலு விலகுகிறாரா என்பது குறித்த தகவல் விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments