FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மண்குடம் சுமந்து பிரார்த்தனையை நிறைவேற்றிய ஹார்ட் பீட் ரீனா!

தெலங்கானா மாநில கோயிலில் ஹார்ட் பீட் நடிகை தீபா பாலு தரிசனம்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:43 pm IST
ஹார்ட் பீட் நடிகை தீபா பாலு - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் நடிகை தீபா பாலு, தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று, மண்குடம் சுமந்து தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான தீபா பாலு, மருத்துவர் மற்றும் மாடல் ஆவார். யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமான இவர், ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நிஜ வாழ்க்கையிலும் மருத்துவர் என்பதால், இத்தொடரில் இவரின் இயல்பான நடிப்பு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, கொலைச்சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள லால் தர்வாஜா கோயிலுக்குச் சென்ற தீபா பாலு, போனலு திருவிழாவில் பங்கேற்றார்.

இந்தக் கோயிலானது, தெலங்கானா மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்

இங்கு போனலு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள், தங்களின் தலைகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பானைகளில் 'போனம்' (அரிசி, பால், வெல்லம் கலந்த பிரசாதம்) சுமந்து வந்து அம்மனுக்கு செலுத்துவார்கள்.

நடிகை தீபா பாலு போனலு திருவிழாவில் பங்கேற்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

summary

Actress Deepa Balu, known for the web series Heartbeat, visited a temple in Telangana and fulfilled her vow by carrying an earthen pot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments