அரைகுறை ஆடைதான் கமர்சியலா? மாறாத தெலுங்கு சினிமா!
பெத்தி படத்தின் டிரைலர் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது...
தெலுங்கில் உருவான பெத்தி திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
கமர்சியல் மசாலா சினிமா என்றாலே நாங்கள்தான் எனப் பல ஆண்டுகளாக தெலுங்கு திரைத்துறையினர் படங்களை உருவாக்கி வருகின்றனர். சாதாரண கதையில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் என அதிக பொருள் செலவுகளைச் செய்து முழுமையான கமர்சியல்களைத் திரைக்குக் கொண்டு வந்து வெற்றியும் பெறுகிறார்கள்.
ஆனால், கமர்சியல் அம்சத்திற்காகத் தொடர்ந்து நாயகிகளை அரைகுறை ஆடைகளை அணியச் செய்து காட்சிகளை எடுக்கும் போக்குகளும் தெலுங்கு சினிமாவில் அதிகரித்துள்ளன.
Advertisement
Advertisement
புஷ்பா திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா இரண்டு பாகங்களிலும் சேலை மட்டுமே உடுத்தினாலும் பாடல்களில் படுகவர்ச்சியாகக் காட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்திலும் ஜான்வி கபூருக்கு நிறைய கவர்ச்சிக் காட்சிகள், தற்போது ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி டிரைலரில் ஜான்வி தாவணி இல்லாமல் ரவிக்கையை மட்டும் அணிந்து மொத்த டிரைலரிலும் வருகிறார்.
மேலே சொன்ன படங்கள் அனைத்தும் கிராமங்களை முன்னிருத்தி உருவானவை. எந்த கிராமங்களில் பெண்கள் இவ்வளவு கவர்ச்சியாக வலம் வருகிறார்கள்? கதையின் உணர்வுகளுக்குத் தொடர்பில்லாமல் பெண்களை இப்படி தொடர்ந்து கவர்ச்சியாகக் காட்டுவதன் அவசியம் என்ன என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
The trailer footage for the Telugu film Peddi has faced criticism.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.