நடிகர் அர்ஜுன் தாஸுக்குத் திருமணமா?
நடிகர் அர்ஜுன் தாஸ் திருமணம் செய்யவுள்ள தகவலுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது...
நடிகர் அர்ஜுன் தாஸுக்குத் திருமணம் என கூறப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர், கான் சிட்டி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று காலையிலிருந்து நடிகர் அர்ஜுன் தாஸுக்குத் திருமணம் ஆகவுள்ளது என்கிற தகவல் வேகமாக பரவியது. பலரும் இதனைச் செய்தியாக்கியதால், எந்த நடிகை என்கிற கேள்விகளும் எழுந்தன.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து பரவும் செய்தி முற்றிலும் தவறான புரளி என்றும் செய்தியாக்கும் முன் தகவலை விசாரிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் விழா மேடையில், காதல் திருமணமா, முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா எதைச் செய்வீர்கள் என்கிற கேள்விக்கு, ‘கல்யாணமே இல்லை’ என அர்ஜுன் தாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
It has been clarified that the reports stating that actor Arjun Das is getting married are untrue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.