சின்னத்திரை நடிகர் பாலாவின் புதிய பட அறிவிப்பு!
பாலா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் பாலாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்னதிரை நடிகர் பாலா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைப் பேச்சாளராகவும் தொகுப்பாளராகவும் பங்கேற்றுள்ளார்.
இவர் பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்துள்ளார். பாலா கதாநாயகனாக அறிமுகமான காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, பாலா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரீமேட்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விமல் குமார் இயக்குகிறார்.
பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பேட்மிண்டன் விளையாட்டை மையப்படுத்தி தமிழில் உருவாரும் முதல் படம் இதுவே.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படம் இந்தாண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
TV Actor Bala Announces His New Film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.