நடிகர் பாலாவின் ரீமேட்ச் படத்தின் பூஜை!
நடிகர் பாலாவின் ரீமேட்ச் படத்தின் பூஜை இன்று(மே 28) நடைபெற்றது.
சின்ன திரை நடிகர் பாலாவின் ரீமேட்ச் படத்தின் பூஜை இன்று(மே 28) நடைபெற்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைப் பேச்சாளராகவும் தொகுப்பாளராகவும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.
இவர், பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே, பாலா கதாநாயகனாக அறிமுகமான காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, பாலா நாயகனாக நடிக்கும் அடுத்தப் படம் ‘ரீமேட்ச்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விமல் குமார் இயக்குகிறார்.
மேலும் இந்தப் படத்தில், சந்தோஷ் பிரதாப், தனு ஹர்ஷா, செல் முருகன் மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.
பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பேட்மிண்டன் விளையாட்டை பிரதானப்படுத்தி தமிழில் உருவாரும் முதல் படம் ரீமேட்ச் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் பாலாவின் ரீமேட்ச் படத்தின் பூஜை இன்று(மே 28) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
The Pooja ceremony for television actor Bala's remake film was held today (May 28).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.