கான் சிட்டி படத்தின் புதிய பாடல் வெளியீடு!
கான் சிட்டி படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியானது தொடர்பாக...
கான் சிட்டி படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’கான் சிட்டி’. புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை பவர் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அனா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, ராதாரவி, பொன்வண்ணன், ரமேஷ் திலக், தீபா ராமானுஜம், ஷாஜி சென் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘ஃப்ராடு பயலே’ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது
இந்தப் பாடலுக்கான வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ள நிலையில், சுப்லக்ஷினி பாடியுள்ளார்.
கான் சிட்டி திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A new song from the movie Con City has been released online and is garnering the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.