ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்
ஜன நாயகன் குறித்து பேசிய வினோத்....
இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் படம் குறித்து பேச தைரியம் இல்லை எனக் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வரான பின்பு ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார்.
ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகுமென தயாரிப்பாளரும் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் சான்றிதழை வழங்காமல் இருப்பதால் இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரவே வாய்ப்புகள் இருக்கின்றன. ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அதற்கு முன்பாகத் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத்திடம் ஜன நாயகன் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு வினோத், “ஜன நாயகனிலுள்ள உண்மையைப் பேச எனக்கு தைரியம் இல்லை. பேசினாலும் அதனை வெளியிடும் தைரியம் உங்களுக்கும் இல்லை” என்றார்.
இயக்குநர் வினோத்தின் இப்பதில் ரசிகர்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன அப்படம் சார்ந்த உண்மைகள் இருக்கின்றன? எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.
Director H. Vinoth has stated that he lacks the courage to speak about the film Jana Nayagan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.