பொங்கல் வெளியீடாக விஷாலின் புருஷன்!
புருஷன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் புருஷன் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
ஆம்பள, ஆக்ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சியுடன் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் புருஷன். இதில், நடிகை தமன்னா நாயகியாக நடிக்க யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆக்ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமென சுந்தர். சி உறுதிப்படுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கனவே பொங்கல் வெளியீடாக வேட்டுவம், டயங்கரம் ஆகிய திரைப்படங்கள் வரும் நிலையில் புருஷனும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நடிகர் ரஜினியின் தர்மன் திரைப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.