பிக் பாஸ் 10: எவிக்ஷனில் இருந்து அவினாஷை காப்பாற்றிய ஜேசன்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் அவினாஷை தனது எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட்டை கொடுத்து ஜேசன் காப்பாற்றியுள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் அவினாஷை தனது எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட்டை கொடுத்து ஜேசன் கெளசி காப்பாற்றியுள்ளார். இருவரும் வீட்டிற்குள் சண்டையிட்டுக்கொண்டு இருந்த நிலையில், அவினாஷ் வெளியேறுவதில் இருந்து ஜேசன் காப்பாற்றியுள்ளார்.
அதுவும் வெளியேறும் நபர்களின் பட்டியலில் ஜேசன் இருந்தும் கூட, அந்த டிக்கெட்டை தனக்காக பயன்படுத்தாமல், அவினாஷுக்காக பயன்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்தில் இரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த வாரத்தின் தொடக்கத்தில் நாமினேஷன் நடைபெற்றது. இந்த நாமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் தொடர தகுதியற்ற நபர்கள் சக போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், அக்ஷிதா, ஜேசன், வினோத் பாபு, முனியம்மாள், முத்தழகி, பிருத்வி ஆகிய 8 பேர் தேர்வாகி இருந்தனர்.
இந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில் இந்த வாரம் அக்ஷிதா, அஸ்மிதா, ஜேசன் மற்றும் அவினாஷ் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இருந்தனர். இவர்களில் இருவர் வெளியேற்றப்பட்டு, இருவர் போட்டியில் தொடருவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தார்.
இதனிடையே எவிக்ஷன் ஃபிரீ டிக்கெட்டை வெற்றி பெற்று வைத்திருந்த ஜேசன், தனை தனக்காக பயன்படுத்தாமல், அவினாஷுக்காக பயன்படுத்தி அவரை காப்பாற்றியுள்ளார்.
இருவரும் நேற்று கூட சண்டையிட்டுக்கொண்டு இருந்த நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் அவினாஷ் தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டு அவரை ஜேசன் காப்பாற்றியுள்ளார். இதனால் ஜேசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.