FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் 10: ஜேசனை மீண்டும் சண்டைக்கு அழைத்த அவினாஷ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் அவினாஷுக்கும் ஜேசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து...

அவினாஷ் - ஜேசன் வாக்குவாதம் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் அவினாஷுக்கும் ஜேசனுக்கும் இடையே மீண்டும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தலைமைப் பொறுப்பு குறித்து வாக்குவாதம் நடத்திவரும் நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் இருவருமே நிதானம் இழந்து கடுமையாக நடந்துகொண்டனர்.

வெளியே வந்தால் என்ன செய்வாய் என ஜேசனிடம் கேட்டுக்கொண்டே அவரை வெளியே வருமாறு அவினாஷ் அழைக்கிறார். இதனால் பதற்றமடைந்த சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவினாஷ் தலைமையின் கீழ் செயல்பட விருப்பம் இல்லாததால் எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஜேசன்.

குழு விவாதத்திலும் சிவப்பு அணியின் முடிவுகளுடன் ஒத்துப்போக விருப்பாததால், நீல நிற அணிக்கு மாற ஜேசன் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், நீல நிற அணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே இதற்கு சம்மதிக்கவில்லை.

எனினும் சிவப்பு நிற உடையை தவிர்த்துவிட்டு நீல நிற ஆடையை ஜேசன் அணிந்துகொள்கிறார். பிளாஸ்மா முன்பு அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது, குழுவுடன் ஜேசன் ஒத்துப்போவதில்லை என டிடிஎஃப் வாசன் பேசுகிறார்.

இதற்கு பதில் அளித்துப் பேசும்போது அவினாஷின் தலைமையில் செயல்பட விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே ஜேசன் தெரிவிக்கிறார். இதனால், ஜேசனுடன் அவினாஷ் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி மோதலாக மாறுகிறது.

இதையெல்லாம் நீ வெளியே வைத்துக்கொள் என ஜேசன் கூறியதால், வெளியே வாடா, எதற்கெடுத்தாலும் வெளியே வா, வெளியே வா என்கிறாய்; வெளியே வாடா என ஆக்ரோஷமாக அழைக்கிறார்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் நிலவியது. சக போட்டியாளர்கள் இருவரையும் பிரித்து அழைத்துச் சென்று சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விடியோ இணையத்தில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

summary

Bigg boss 10 tamil Jason Avinash clash again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments